தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அரசு வேலைக் கொடுப்பதாக கூறி ரூ. 3 லட்சம் வசூல் செய்த குற்றத்தால் சீரியல் நடிகர் தினேஷ் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புகாரின் படி, 2022ல் நெல்லை பணகுடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, தினேஷ் ரூ. 3 லட்சம் பணம் வசூலித்தார். ஆனால், வேலையை வழங்காமல் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
அதன் பின்னர், பெண்ணின் தந்தை, தற்பொழுது பணத்தை திருப்பி கேட்க சென்றபோது, தினேஷ் அவரை கம்பால் அடித்து மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சியையும், சங்கடத்தையும் உண்டாக்கியுள்ளது.
இது சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை காவல் நிலைய பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன் நடிகர் தினேஷை பொலிஸார் கைதும் செய்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.
Listen News!