• Apr 27 2025

ராஷ்மிகாவின் படத்தைப் பார்த்து தங்கம் தோண்டிய மக்கள்...!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில், மத்திய பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியான 'சாவா' திரைப்படத்தில் மராத்தியரிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் மத்திய பிரதேசத்தில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை உண்மை என நம்பிய மக்கள், அந்த தகவலின் அடிப்படையில் மண்ணை தோண்டி தங்கத்தை தேடத் தொடங்கியுள்ளனர்.


மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பழமையான கோயில்கள், அரண்மனை வளாகங்கள் மற்றும் பழமையான பகுதிகளில் தங்கம் இருப்பதாக கருதி மக்கள் வேகமாக தேடல் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தீயாய் பரவியதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்க தொடங்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம் முழுவதும் தங்கத்தைக் கண்டுபிடிக்க நினைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலர் தங்கம் இருப்பதாகக் கூறப்படும் இடங்களில் நுழைந்து தங்களை அறியாமலே சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள். இதனால், சில முக்கியமான மரபுசார் இடங்கள் சேதமடையக் கூடிய  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இந்தத் தகவல் அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement