• Jul 17 2025

‘குட் பேட் அக்லி’ படத்தின் இசை குறித்த ஜி.வி. பிரகாஷ் அப்டேட்..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைக்கு வந்தது முதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்து உள்ளது .


இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார். எப்போதும் தனது திரைப்படங்களுக்கு தானாகவே பிரமோஷன் செய்யும் ஜி.வி. தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அப்டேட்களை பகிர்ந்து வருகின்றார். ஜி.வி., ‘குட் பேட் அக்லி’ படத்திற்கான ஒரு முக்கியமான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். ஜி.வி. தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “GBU ost soon, mixing on progress, ready ya maamey ” என தெரிவித்துள்ளார். இதில் GBU என்பது ‘Good Bad Ugly’-யை குறிக்கிறது. தற்போது படத்தின் Original Sound Track  தயாரிப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதை இந்த பதிவில் அவர் உறுதி செய்துள்ளார்.


இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஏற்கனவே படத்தில் வெளியான பாடல்கள் மற்றும் பிஜிஎம்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. இந்நிலையில் முழுமையான OST விரைவில் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளநிலையில்  ஜி.வி. பிரகாஷின் அப்டேட், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




Advertisement

Advertisement