• Jul 18 2025

ரசிகர்கள் காதல் வயப்பட போகிறார்கள்... "பறந்து போ" படத்தை புகழ்ந்து பேசிய ஒளிப்பதிவாளர்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் என்றால் தனி அடையாளம். எதார்த்தமான காட்சிகள், உணர்ச்சி நிரம்பிய கதைகள், சமூக பார்வைகள் அனைத்தையும் சொல்லும் நேர்மையான கலைஞர். அவர் இயக்கிய பல படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.


அவரது அடுத்த படைப்பாக உருவாகி உள்ள "பறந்து போ" படம், இப்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், காதலுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையில் ஒரு மென்மையான பாலமாக அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.

இத்திரைப்படம் ஒரு விசித்திரமான காதல் பயணம். இந்த கதையின் தனிச்சிறப்பை, படம் பார்த்த அனைவரும் உணர முடியும். முன்னமே திரைப்படத்திற்கான இணைய முன்னோட்டங்கள், ட்ரெய்லர், சமூக வலைத்தள விமர்சனங்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


இதற்கிடையில் உலகத் தரமான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒரு தனிப்பட்ட பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்போது அவர்,"பறந்து போ மிகச்சிறந்த திரைப்படம். பார்வையாளர்கள் மீண்டும் காதல் வயப்பட போகின்றனர்." எனப் பாராட்டியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் போன்ற கலைஞரின் பாராட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கவைத்துள்ளது.


Advertisement

Advertisement