• Apr 16 2026

"D 55" படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தனுஷ் மற்றும் பிரபல இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்து உருவாக்கி வரும் புதிய படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. தற்காலிகமாக ‘D55’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.


இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகும் நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தனுஷின் முன்னணி படங்களின் சாதனைகள் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் கதைகள், காமெடி மற்றும் ஆக்ஷன் கலவையில் இருப்பது, ‘D55’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ‘D55’ படத்தின் இசை சாய் அபயங்கர்யால் அமைக்கப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. சாய் அபயங்கர் தனது புதுமையான இசை மற்றும் ட்ரெண்டிங்கான  பின்னணி இசை மூலம் பல படங்களுக்கு வெற்றிகளைக் குவித்துள்ளார். இதனால், ‘D55’ படத்தின் இசை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அத்துடன், படக்குழு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில், தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார் என்று அறிவித்தது. ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனுஷ்–ஸ்ரீலீலா கூட்டணி, ரசிகர்களுக்கு புதிய காமெடி மற்றும் ரொமான்ஸ் கலவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படக்குழு, ‘D55’ படத்தின் புதிய கதாபாத்திரம் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கவைத்துள்ளது. 

Advertisement

Advertisement