• Apr 21 2026

எல்லாரும் என்னை எதிர்க்கிறாங்க... இது தப்பா? பிரச்சாரத்தின் போது உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக நிறைவடைகின்றன. இந்த இறுதி கட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், விஜய்யும் தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


தனது கட்சியான தவெக மூலம் 233 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள விஜய், வாக்காளர்களை நேரடியாக அணுகி ஆதரவு கோரி வருகிறார். சென்னையின் ஈசிஆர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தனது உரையில் விஜய் கூறிய சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. “நான் நடிகன் தான், ஆனால் அரசியலில் நான் நடிக்கவில்லை. இது மாற்றத்திற்கான தேர்தல். மாற்றத்தை வழங்கக்கூடிய எங்கள் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் என்னை எதிர்க்கின்றன. மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தவறா? கோடிக்கணக்கான மக்கள் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது தப்பா?” என்று அவர் உணர்ச்சியுடன் பேசியுள்ளார்.

விஜயின் இந்த பேச்சு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement