• Aug 08 2025

பிக்பாஸ் முடிந்தாலும்.. நட்பு இன்னும் முடியல! ரயான் வீட்டில் ஒன்றுகூடிய போட்டியாளர்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவரான ரயான், சமீபத்தில் தனது பிறந்த நாளை ஜாக்லின், செளந்தர்யா, பவித்ரா உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களுடன் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடியுள்ளார். இந்நிகழ்வின் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகின்றது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ, பிக்பாஸ் வீட்டுக்குள் உருவான நட்பு பந்தங்களை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது.


ரயான் தனது பிறந்த நாளை மிக எளிமையாகவும் உற்சாகமாகவும் கொண்டாட முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் தனது நெருங்கிய பிக்பாஸ் தோழிகள் ஜாக்லின், செளந்தர்யா, பவித்ரா ஆகியோரை அழைத்து சிறிய கொண்டாட்டம் நடத்தினார்.


இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை ரயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஜாக்லின் மற்றும் செளந்தர்யா தங்கள் ஸ்டைலிஷ் உடைகளில் தோன்றி கலர்ஃபுல் போட்டோக்கள் எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement