• May 16 2026

ஒரே நாளில் டபுள் செலிப்ரேஷன்.! மகாராஜா மகளின் பர்பெக்ட் பர்த்டே மோமெண்ட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த சிறுவயது நட்சத்திரம் தான் நடிகை சாச்சனா.

'மகாராஜா' படத்தில் உணர்வுபூர்வமான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த சாச்சனா, அதையடுத்து 'மதராஸி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவரை தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்துடன் நிலைநிறுத்தின.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்ட சாச்சனா, 24 மணி நேரத்திலேயே நாமினேட் ஆகி வெளியேறினார். ஆனால் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக  உள்ளே சென்று 60 நாட்கள் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 


பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி "என்னை அப்பா என்று கூப்பிடலாம்" என்று சலுகை கொடுத்தாலும் சாச்சனா அவரை "சார்" என்றே அழைத்தது பலரின் பாராட்டை பெற்றது.

சமீபத்தில் நடிகை சாச்சனா குடும்பத்துடன் சேர்ந்து 12 முதல் 14 லட்சம் மதிப்புள்ள புதிய NEXA கார் வாங்கியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு பலரது பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில், நடிகை சாச்சனா தன்னுடைய 23வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மேலும் அவரின் டுவின்ஸ் சகோதரியும் அவருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். தற்போது இவர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement