• Apr 17 2026

இப்போ ட்ரெண்டிங் ஃபேமிலி யாரு தெரியுமா? சஞ்சீவ் வீட்டில் ஆஜரான பிரபலம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். ஆல்யா மானசா முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். 

இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பு சீரியலில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இதனை அடுத்து ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். 


இந்த நிலையில், சஞ்சீவ் - ஆல்யா மானசாவின் மகள் ஐலாவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன.

தனது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை, ட்ரெண்டிங் ஃபேமிலி இன் த வேர்ல்ட் என்று கேப்சன்  போட்டு பகிர்ந்துள்ளார் சஞ்சீவ்.

இதே வேளை, ஐலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கயல் சீரியல் நடிகை கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement