• Jul 13 2025

இலங்கை பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட மலையாள நடிகர்...!யார் தெரியுமா?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால் தனது  நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கொண்டிருக்கிறார். இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகின்றார். மேலும் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் இயக்குநர் எனப் பன்முக திறமையோடு வலம் வரும் இவர் சில தினங்களிற்கு முன்பு இலங்கை வருகை தந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது 


மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் 'பேட்ரியட்' எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 


இந்நிலையில் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் மோகன்லால் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வீடியோ நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இதன் போது பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி அவரை வரவேற்றதுடன் நடிகர் மோகன்லால் பார்வையார் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்  என்ற  தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement