• May 15 2026

ரஜினிக்காக உருவான கதையை தட்டித் தூக்கிய ராதிகா... எந்தப் படம் தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “தாய் கிழவி” திரைப்படம் வருகின்ற 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ராதிகா பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


விழாவில் பேசிய ராதிகா, இப்படம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அதன்போது,  “தாய் கிழவி.. ரஜினி நடிச்சிருக்க வேண்டிய படம்.. அந்தளவு இதுல மாஸ் இருக்கு. ஆனா இந்த மாதிரி ரோல்ல அவர் நடிக்க மாட்டாரு. அதனால நான் நடிச்சேன். என்னோட கணவர் சரத்குமார் இந்த கதைய கேட்டதும் என்னைய கண்டிப்பா நடிக்க சொன்னாரு. அதுனாலயும் நான் நடிக்க ஒத்துக்கிட்டேன்.” என்று கூறியிருந்தார். 

இந்த கூற்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. பெண்மையை மையமாகக் கொண்டு உருவாகும் கதைகள் அதிகரித்து வரும் நிலையில், “தாய் கிழவி” திரைப்படம் அதில் வித்தியாசமான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement