• Jun 15 2026

இந்தியன் 2 படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? விரைவில் ஆடியோ லாஞ்ச்...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சங்கர் இயக்கி வருகின்றார்.

இந்தியன் 2ம் பாகத்தில் கமலஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அந்தப் படத்தில் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒன்றாக வெளியாகி வருகின்றது. கடந்த வாரம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா என்ற பாடல் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் எதிர் வரும் மே 29 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சித்தாக் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடையேயான ரொமாண்டிக் பாடல் என்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் ஜீன் முதலாம் தேதி  இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச்சும் சென்னை உள்ள நேரு விளையாட்டரையில் நடைபெறும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement