• Apr 26 2025

‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது பாடலின் மாஸான அப்டேட்..! என்ன தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

அஜித் குமாரின் அடுத்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ தற்போது படப்பிடிப்பு பணிகளைத் தொடர்ந்து பாடல் வெளியிடுவதன் மூலமும் ரசிகர்களைக் கவரத் தொடங்கியுள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘God Bless U’ என்ற லிரிக்ஸ் வீடியோப் பாடல் இன்று மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


இப்படம் அஜித் முன்னர் நடித்த படங்களிலிருந்து மிகப் பெரிய வேறுபாடாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் ‘God Bless U’ பாடல் என்பது, படத்திற்கு பவர்புல் கொடுக்கும் வகையில் காணப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்தப் பாடலை மட்டும் பார்த்து அதிலிருந்து கதையின் ஒரு பகுதியை புரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் அஜித் ரசிகர்களுக்கு இந்த மாதம் முழுவதும் கொண்டாட்டம் என்றே படக்குழு கூறியுள்ளது.

Advertisement

Advertisement