• Apr 27 2026

தனுஷின் "கர" படத்திற்கு திடீர் தடை? - சிக்கலில் படக்குழு... பின்னணி என்ன தெரியுமா?

shali / 2 hours ago

Advertisement

Listen News!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கர” திரைப்படம் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இப்படத்தில் ஜெயராம், கருணாஸ், ரவிக்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், “கர” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில், “கர” என்ற பெயரை தாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளதாகவும், அதே பெயரை மாற்றாமல் பயன்படுத்தி இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கின் காரணமாக, படத்தின் திட்டமிட்ட வெளியீட்டில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்த படம், சட்ட பிரச்சனைகளை சமாளித்து குறித்த தேதியில் வெளியாகுமா என்பது தற்போது கவனிக்கப்படும் முக்கிய விஷயமாக உள்ளது. தயாரிப்பு குழுவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement

Advertisement