• Apr 16 2026

'ஆடு ஜீவிதம்' முதல் நாளிலையே அதிக வசூல் வேட்டை செய்ததா? வெளியானது முழு விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள படம் தான் ஆடுஜீவிதம்.  இந்த படம் நேற்றைய தினம் வெளியானது.

'ஆடுஜீவிதம்'  படத்தின் கதைக்களம், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்  பிருத்விராஜ், தனது மனைவி அமலாபாலை  பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக உடல் மெலிந்து ஓடாகத்தேய்ந்து தன்னை வருத்தி இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார்  பிருத்விராஜ்.


இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.7.45 கோடி வசூலித்து உள்ளது. மேலும், கேரளாவில் ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும், உலகளவில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement