• May 17 2025

திரைத்துறையிலிருந்து ஓய்வெடுக்கும் பிரமாண்ட இயக்குநர்...! பின்னணி என்ன தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் பற்றிய தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. குறிப்பாக, லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் , விக்ரம் , கைதி மற்றும் லியோ போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருந்தன. அந்த வகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் "நான் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக் குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர். குறிப்பாக இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் அவருக்கு அதிகளவு வசூலைப் பெற்றுக் கொடுத்தன. கைதி 2, விக்கிரம் 2, ரோலெக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி ஆகிய படங்களை இயக்கிய பின் அவர் இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஒரு நேர்காணலில் "நான் குறைந்த படங்கள் மட்டுமே இயக்குவேன், அதற்குப் பிறகு புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், "நான் 10 படங்களை மட்டுமே இயக்குவதாகவும் அதன் பின்னர் தயாரிப்பில் கவனம் செலுத்துவேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் அனைத்து ரசிகர்களிடையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement