• Jun 28 2025

வசூலில் தாறுமாறாக வேட்டையாடும் சூரியின் கருடன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மே 31-ம் தேதி வெளியான திரைப்படம் தான் கருடன். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.

படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன் உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

விடுதலை படத்திற்கு நடிகர் சூரி கொடுத்த கடின உழைப்பின் காரணமாக அடுத்தடுத்து சிறந்த திரைக்கதைகளை ஏற்று நடித்து வருகின்றார். தற்போது கருடன் படமும் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. காமெடியனாக இருந்த சூரி தற்போது நாயகனாக ஸ்கோர் செய்து வருகின்றார்.


கருடன் படம் வெளியான முதல் நாள் இருந்தே நல்ல வசூலை பெற்று வந்த நிலையில், இனி வரும் நாட்களும் விடுமுறை வருவதால் இதற்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கருடன் படத்தின் இதுவரையிலான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கருடன் படம் இதுவரை 39 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement