• Apr 19 2026

திரையரங்கில் வெற்றி நடைபோடும் "தாய்கிழவி".. இத்தனை நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் 'தாய்கிழவி' . குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குடும்பம், தாய்மை மற்றும் உறவுகளின் மதிப்பை பேசும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


பொதுவாக குடும்ப உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அதேபோல், ‘தாய் கிழவி’ திரைப்படமும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய உணர்ச்சிபூர்வமான கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்தது ராதிகா சரத்குமார் நடித்த கதாபாத்திரம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு தாயின் உணர்ச்சிகள், குடும்பத்திற்காக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் ராதிகா, இந்த படத்திலும் தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல் 10 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement