• May 16 2026

ஐட்டம் மாதிரி டிவிக்கு டிவி தாவுறீங்களே..? செருப்படி கேள்வி கேட்ட பேன்ஸ்! ஆவேசத்தில் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பலரின் பேவரிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமானது.

இந்த சீசனில் விஜய் டிவி கணேஷ், பிரியங்கா தேஷ் பாண்டே, வசந்த், சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல், திவ்யா துரைராஜ் ஆகியோர் பங்கேற்றதுடன், செஃப் தாமு மற்றும் பிரபல சமையல் கலைஞரான மதம்பட்டி ரங்கராஜனும் கலந்திருந்தார்.

எனினும் இதில் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இல்லாதது பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை ஒருநாள் வெல்லும் என்பது போல வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இதை தொடர்ந்து சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ஷோ ப்ரோமோவை வெங்கடேஷ் பட் வெளியாக்கி இருந்தார். இவ்வாறு சன் டிவியில் வெங்கடேஷ் புதிய சமையல் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்.


இதில் அவருடன் விஜய் டிவி பிரபலங்களான பரத், ஜிபி முத்து, தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள். ஒரு பக்கம் இதற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்தாலும் மறுபக்கம் நெகட்டிவ் கமெண்ட் குவிந்து வந்தன.

இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமும், டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை தொடர்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து அதிலிருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி இருந்தார்.  தற்போது விஜய் டிவியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகி சன் டிவி நிகழ்ச்சிக்கு தாவிய நிலையில், ஜி பி முத்தும் அவருக்கு பின்னாடியே அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கவே அவர் ஆவேசப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனாலும் ரசிகர்கள் இப்படி ஐட்டம் மாதிரி டிவிக்கு டிவி தாவுறீங்களே என கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதோ அவர் வெளியிட்ட வீடியோ,


Advertisement

Advertisement