• Apr 16 2026

இயக்குநர் வெங்கட் பிரபுவை காணவில்லை! திடீரென சர்ச்சையை கிளப்பிய நானி வில்லனின் ட்விட்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28 என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழில் நல்ல படங்களை மக்களுக்கு வழங்கி கலக்கி வந்த வெங்கட் பிரபு, கடந்த ஆண்டு கஸ்டடி என்ற படத்தின் மூலம் டோலிவுட்டில் நுழைந்தார்.ஆனாலும் இந்த படம் தோல்வியை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் கூட்டணி அமைக்க அவருடன் கைகோர்த்தார்.


இதை அடுத்து தமிழில் விஜய்யின் புகைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது.

இதனால் கிச்சா சுதீப்பின் படத்தை கிடப்பில் விட்டுவிட்டு நடிகர் விஜயின் கோட் படத்திற்கு விறுவிறுப்பாக பணிகளை ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.

இதனிடையே வெங்கட் பிரபுவின் சகோதரி பவதாரணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதன் காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.


இவ்வாறான நிலையில், அண்மையில் கிச்சா சுதீப் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடிய போது, அப்போது ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீங்கள் நடித்த படம் என்ன ஆனது? என கேட்க, அதற்கு வெங்கட் பிரபுவை காணவில்லை என்று கிச்சா சுதீப் பதிலளித்துள்ளார்.

தற்போது அந்த விடயமே சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.


Advertisement

Advertisement