• May 17 2026

600 பேர்கிட்ட கதை சொன்னேன்.. கடைசில கதையே மறந்து போச்சு.! "ரெட்" பட இயக்குநர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள அனுபவங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, அஜித் நடித்த Red திரைப்படத்தை இயக்கிய காலத்தின் நினைவுகளை அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பேட்டியில் சிங்கம் புலி, “எல்லாரும் சொல்லுவாங்க, நான் 2 மணி நேரம் கதை கேட்டேனு. நான் அஜித்தை வைத்து ரெட் படம் எடுத்த போது 600 பேர் கிட்ட கதை சொல்லியிருக்கேன். கதை சொல்லி சொல்லி எனக்கு படத்தோட கதையே மறந்து போச்சு. 

அந்தப் படத்துக்கு நான் பட்ட பாடு இருக்கே, படத்தோட டைட்டில் போட கூட என்ன பெயர் வைக்கிறதுன்னு தெரியாம எனக்கு சத்யானு பெயர் வச்சாங்க. கோவிலுக்கு போனா கூட என்ன பேர் சொல்றதுன்னே தெரியாது.” என்று கூறியுள்ளார். 

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரிடம் கதை சொல்ல வேண்டிய சூழல் இருக்கும். அந்த அனுபவத்தை மிகச் சிரிப்பூட்டும் விதமாக சிங்கம் புலி பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement