• Apr 17 2026

தமிழ் சினிமாவில் தனது மகனையும் களமிறக்கும் இயக்குநர் முத்தையா!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் உருவாகும் கதைகளை திரைப்படங்களாக எடுத்து புகழ் பெற்றவர் தான் இயக்குநர் முத்தையா.

இவர் இயக்கத்தில் வெளியான குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிக்குட்டி பாண்டி, விரும்பன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தான் இயக்கும் அடுத்த படத்தில் தனது மகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார் இயக்குநர் முத்தையா.

இயக்குநர் முத்தையாவின் படங்கள் கிராமத்து பின்னணியில் பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதைப் போன்று எழுதி இருக்கிறாராம். 


மேலும், இளைஞர்களை மையப்படுத்தி எமோஷனல் ட்ராமாவாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் முத்தையா நடிகனாக நடிக்க இருக்கும் இந்த படத்தில், தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றார்கள். முழுக்க முழுக்க புது முகங்களை மையப்படுத்தி, இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் முத்தையா.

இந்த படத்தை கே.கே .ஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, எம் சுகுமார் இதற்கான ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement