• May 08 2025

காமெடி நடிகர் சூரிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வாழ்த்து..!

Mathumitha / 16 hours ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பரோட்டா சூரியாக சூப்பர் காமெடி நடிகராக வலம் வந்த இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து கருடன் படத்திலும் நடித்தார்.


தற்போது படவா ,ஏழு கடல் ஏழுமலை போன்ற  படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் மாமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் இசையமைப்பு விழா தற்போது நடைபெற்று வருகின்றது. தற்போது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் " எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 10 கதை வந்தால், அதில் 5 கதை சூரியை கதாநாயகனாக வைத்து எழுதப்பட்டதாக இருக்கிறது. அவரது வளர்ச்சி பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது” என விழாவில் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement