• Aug 28 2025

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது வெளியான டிமான்டி காலனி2  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு  இதன் முதல் பாகம் வெளிவந்தது. இந்த படம் ஒரு திகில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. 


இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆகஸ்ட்-15 திகதி இரண்டாம் பக்கம் வெளியாகி இதுவரை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இப்படத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.


மேலும் கதாநாயகியாக களமிறங்கி பட்டையை கிளப்பினார் பிரியா பவானி ஷங்கர். தங்கலான் படத்துடன் இந்த படம் வெளி வந்திருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மக்கள் கொண்டாடும் இந்த படம் 4 நாளில் ரூ. 21 கோடி வசூல் ஈட்டியுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement