• Jun 14 2026

தனுஷ் சார் இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுப்பார் என நினைக்கல.? சாண்டி மாஸ்டர் சூப்பர் அப்டேட்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

‘போர்தொழில்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் ராஜா இயக்கிய படம் என்பதால், இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் தனுஷும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் படம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் வெளியான பிறகு, விமர்சன ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டது. அதேபோல் வசூல் ரீதியாகவும் படம் எதிர்பார்த்த அளவிற்கு சாதிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் ‘கர’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தற்போது தனுஷ் தனது அடுத்த பெரிய முயற்சியான ‘D55’ படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படம், தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகி வருகிறது.

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால், இந்த படத்தின் மீதும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ‘D55’ படத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் குறித்து நடன இயக்குநர் சாண்டி தெரிவித்த தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறுகையில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழு பாடலுக்கே தனுஷ் சார் செம்ம எனர்ஜியுடன் ஆடியிருக்கிறார். அவர் டான்ஸ் ஆடிய விதத்தை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘கர’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘D55’ மூலம் தனுஷ் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement