• Apr 18 2026

ஜீ தமிழ் தொலைக்காட்சி அசானியை டிஆர்பிக்காக மட்டும் தான் பயன்படுத்தினார்களா? ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

உலகளவில் குழந்தைகளின் இசை திறமையை அறிய வைக்கும் நிகழ்ச்சியாக 'சரிகமப' காணப்படுவதோடு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தையும்  பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி, ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 


அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்குவதோடு,  ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் ஆகிய நான்கு பேரும் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சரிகமப சீசன் 3 லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கான பைனலிஸ்ட் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் அசானியின் பெயர் இடம் பெயரவில்லை.

இதனால் ரசிகர்கள் இலங்கைப் பெண்ணான கில்மிஷா பைனல் லிஸ்ட் இருந்தாலும் அசானி இல்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. 

அதோடு அசானியை ஜீ தமிழ் டிஆர்பிக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டார்களா என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement