• May 15 2026

மாதம்பட்டி ரங்கராஜின் நியூ இயர் செலிப்ரேஷசனை பார்த்தீங்களா? வைரல் கிளிக்ஸ் இதோ...

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா பற்றிய பஞ்சாயத்து தான் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.   அவர்கள் சம்பந்தமான பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

ஜாய் கிரிசல்ட்டா தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருக்க,  மாதம்பட்டி ரங்கராஜ் அதை பொருட்படுத்தாமல் தனது முதல் குடும்பத்துடன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வருகின்றார்.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் தனது குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தற்பொழுது அவருடைய புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 31ஆம் தேதி தான் மாதம்பட்டி ரங்கராஜை அட்டாக் செய்யும் வகையில் அவரின் தனிப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஜாய் கிரிசல்ட்டா.  மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல.. ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன் தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது என்றும் பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, ஜாய்க்கு பிறந்த ஆண் குழந்தை DNA டெஸ்டில் தன்னுடையது என உறுதியானால் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்பேன் எனக் கூறிய ரங்கராஜ், இதுவரையில் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு செல்லவில்லை எனவும் தொடர்ச்சியாக ஜாய் கிரிசல்ட்டா பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement