• Apr 27 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியை ரீ-டெலிகாஸ்ட் செய்ய ரத்து...! டிஆர்பியில் மவுஸ் இழந்ததா..?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது கடந்த ஏழு சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தமிழ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.


இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுக்கு முக்கிய காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கியமை ஆகும். அதில் கமல் தனது தனித்துவமான அணுகுமுறை, சமூக கருத்துக்கள் மற்றும் நகைச்சுவையான பேச்சு என்பன ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சமீபத்தில் பிக்பாஸ் 8வது சீசன் ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதற்கு பிறகு, இதே சீசன் வேறொரு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் மீண்டும் ஒளிபரப்பானது. ஆனால், மீண்டும் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் 8வது சீசனுக்கு டிஆர்பி குறைவாக வந்ததால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளனர். இந்தத் தகவல் அனைத்து பிக்பாஸ் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement