• Aug 28 2025

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஷிவானி? சர்ச்சையை கிளப்பிய போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர்தான் ஷிவானி. இவருக்கு ஆரம்பத்தில் குணச்சித்திர வேடம் தான் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறினா.ர் பிறகு ஹீரோயினாக ப்ரொமோட் ஆனார்.

பகல் நிலவு சீரியலில் அஸீமுக்கு ஜோடியாக நடித்தார். அதே சமயத்தில் ஷிவானிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார்.

அத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதம்விதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வந்தார் ஷிவானி. அதிலும் கவர்ச்சி தூக்கலாகவே பதிவிடும் இவரது புகைப்படங்களை பார்த்து பல மில்லியன் கணக்கில் பாலோவர்களும் கூடினார்கள்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கு பற்றினார். அதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் காதலித்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.


இதை அடுத்து  ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிய சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார். பிறகு முதன் முதலாக விக்ரம் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து பிரபலம் ஆனார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ஷிவானி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதில் உதடு பெரிதாகி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார்.  

இதை பார்த்த ரசிகர்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் இப்படி முகம் மாறி இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பி உள்ளது.

Advertisement

Advertisement