• Aug 08 2025

சூர்யாவுக்கு போட்டியாக வாரிசை களமிறக்கிய அர்ஜூன்.. நாலா பக்கமும் ஆப்பு,..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் திரையரங்குகளில் 10 மொழிகளிலும் ஓடிடியில் 30 மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’கங்குவா’ படம் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் 4 மொழிகளிலும் போட்டிக்கு சில படங்கள் வெளியாக இருப்பதால் நாலா பக்கமும் ஆப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழில் ’கங்குவா’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் வெளியாகும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கிலும் பிரபல நடிகர் ஒருவர் தனது படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கும் நிலையில் தற்போது கன்னடத்திலும் ஒரு படம் வெளியாக இருப்பதாக தெரிகிறது

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரி மகன்  துருவா சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ’மார்ட்டின்’ என்ற கன்னட திரைப்படமும்  ’கங்குவா’ படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்த நிலையில் அதில் அர்ஜுன் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’மார்ட்டின்’ திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் கன்னடத்தில் ’கங்குவா’ வசூலை பாதிக்க வைக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement