• May 16 2026

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் நடந்த அசம்பாவிதம்! அதிரடி சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடத் திரையுலகில் முன்னாடி என்ற படத்தின் மூலம் நாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை சாயா சிங். இவர் தனுஷ் நடித்த திருடா திருடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் பட்டித்  தொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா மன்மத ராசா என்ற பாடலுக்கு இவர் ஆடிய குத்தாட்டம் இன்றுவரையில் பேமஸ் ஆக காணப்படுகிறது. அதற்குப் பிறகு இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.


இந்த நிலையில், பெங்களூர் நகரில் உள்ள சாயா சிங்கின் தாயார் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆகியன திருடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளதோடு, இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement