• Aug 28 2025

டிமான்டி காலனி 2 வைரலாகும் வசூல் விபரம்... முழு வசூல் எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டிமான்டி காலனி. ஒரே ஒரு வீடு வைத்து திகிலூட்டிய இப்படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் ரிலீஸானது.அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர்.


விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. தமிழில் 2ம் பாகம் வெற்றியடைய வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தெலுங்கில் பதிப்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வெளியாக இருக்கிறது.


திகில் படங்களுக்கு மக்கள் எப்போதும் கொடுக்கும் ஆதரவு இந்த டிமான்டி காலனி 2 படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது. முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தும் டிமான்டி காலனி 2 படம் மொத்தமாக ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


Advertisement

Advertisement