• May 15 2026

கடந்த ஆண்டு முதல் தொடரும் தாமதம் - 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' எப்போது வரும்? புதிய அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், 'டியூட்' படத்தின் வெளியீட்டு காரணமாக முதலில் தள்ளிப்போனது. அதன்பிறகும் பலமுறை வெளியீடு மாற்றப்பட்டதால் ரசிகர்கள் நீண்ட காலமாக படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக திகழும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் மீண்டும் ஒருமுறை வெளியீட்டு தேதி மாற்றத்தை சந்தித்துள்ளது. 


அதன்படி, இந்த படம் ஏப்ரல் 3ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தொடர் தாமதங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தமுறையாவது குறித்த தேதியில் படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement