• Aug 17 2025

இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா இருக்கே..!! பிக்பாஸ் சௌந்தர்யா வெளியிட்ட க்யூட் பிக்சர்ஸ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதியாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக திகழ்ந்தவர் சௌந்தர்யா. இவர் சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் ஆக சௌந்தர்யா காணப்பட்டார். ஆனாலும் ஒரு சிலர் அவரது நடவடிக்கைகள்,  ரியாக்ஷன்கள் போன்றவற்றின் மீது கடும் வெறுப்பை காட்டினர்.


பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே அவருக்கு காதலும் கைகூடியது.  அதாவது அவரது நண்பரான விஷ்ணுவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி இருந்தார் சௌந்தர்யா. அவரும் அதனை ஏற்றுக் கொண்டு  விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார் சௌந்தர்யா. மேலும் அடிக்கடி  தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில்,  நடிகையும் பிக் பாஸ் பிரபலமும் ஆன சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement