• May 17 2025

மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாட்டில் இருக்கும் ஷிவாங்கி.. அப்படி என்ன தான் செய்கிறார்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி தற்போது மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

சூப்பர் சிங்கர் சீசன் ஏழு நிகழ்ச்சியில் பாடகியாக கலந்து கொண்ட ஷிவாங்கி அந்த நிகழ்ச்சியில் 6வது இடம் பிடித்தார் என்பதும் இருப்பினும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு திருப்பமாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த சீசனில் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி அதன் பிறகு நான்காவது சீசனில் குக்காக மாறினார் என்பதும் அதில் அவர் மூன்றாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்ட நிலையில் திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தில் நடித்த ஷிவாங்கி அதன் பின்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதாகவும் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அவர் தேதி கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பாடகியாக இருந்தபோது கூட தன்னை யாரும் கண்டு கொண்டதில்லை என்றும் குக் வித் கோமாளி என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி தான் தனக்கு பெரிய அளவில் பிரபலம் தந்தது என்றும் குறிப்பாக நான்காவது சீசனில் குக்காக வந்த போது தனக்கு மிகுந்த ஆதரவு கிடைத்தது என்றும் ஷிவாங்கி  கூறியுள்ளார்.


Advertisement

Advertisement