• Aug 08 2025

இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிலியாவிற்கு குவியும் வாழ்த்துக்கள் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையில் பெரிதும் அறியப்படும் நடிகைகளில் முன்வரிசையில் இருப்பவர் நடிகை ஜெனிலியா.தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் மராத்திய படங்களில் பணியாற்றியிருக்கும் நடிகை ஜெனிலியா தென்னிந்திய பிலிம்பேர் விருது மற்றும் இரண்டு நந்தி விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர்.


தமிழில் "பாய்ஸ்" படத்தின் மூலம் கிடைத்த அறிமுகமே அவருக்கு பெரு விளம்பரமாக ஆனா நிலையில் அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் ஜெனிலியா.இன்றைக்கும் எவர் கிறீன் திரைப்படமாக அறியப்படும் "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்தில் இவரது கதாபாத்திரமான ஹாசினி இன்று வரை பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக காணப்படுகிறது.

Genelia: நம்ம ஜெனிலியாவுக்கு இவ்ளோ பெரிய மகன்களா!: புகைப்படங்கள் - genelia  has two grown up sons: pictures - Samayam Tamil

இவரது எதார்த்தமான நடிப்பும் சுட்டித்தனமான பேச்சு மொழியும் ரசிகர்களால் பெரிதும்  ரசிக்கப்படுகிறது.தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்வில் சந்தோசமாக இருக்கும் ஜெனிலியா இன்று தனது 37வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் இருந்து ஜெனிலியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

Advertisement

Advertisement