• Aug 29 2025

சித்ராவின் கையில் கட்டு... மேடையில் புது கான்செப்ட்; வெளியான சூப்பர் சிங்கர் 11 ப்ரொமோ..!

luxshi / 2 weeks ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் தனது இனிய குரலால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கும் பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா.

தமிழ் திரையுலகில் “சின்ன குயில்” என்ற செல்லப்பெயரால் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார்.

இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடந்த பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகிய சூப்பர் சிங்கர் சீசன் 11 ப்ரொமோவில், சித்ரா வலது கையில் கட்டுடன் தோன்றிய காட்சி ரசிகர்களின் கவலையை கிளப்பியுள்ளது.

 அவர் கையில் அடிபட்ட நிலையிலும் நிகழ்ச்சிக்காக நேரில் வந்து, புன்னகையுடன் போட்டியாளர்களை ஊக்குவித்துள்ளார்.

“எந்த சூழ்நிலையிலும், கவலை இருந்தாலும், இங்கே வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்ற அவரது வார்த்தைகள், ரசிகர்களை உருக்கச் செய்துள்ளன.

இதனிடையே இந்த முறை சூப்பர் சிங்கர் சீசன் 11இல், வழக்கத்திற்கு மாறாக நடுவர்கள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.


போட்டியாளர்களின் தேர்வு குறித்து நடுவர்களுக்கே வாக்குவாதம் எழும் விதமாக ப்ரொமோ அமைக்கப்பட்டுள்ளதால், இந்த சீசன் இன்னும் அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பின்னணி பாடகி சித்ரா காயத்துடன் இருந்தபோதும் சூப்பர் சிங்கர்  மேடையில் கலந்து கொள்வது, அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். “சித்ராவின் புன்னகைதான் இந்த சீசனின் ஹைலைட்” என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement