தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பெறுவதற்காக கடுமையாக போராடி வரும் நடிகர் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் கதையின் நாயகனாக நடிக்கும் 'பல்ஸ்' படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் ரிஷிகா கபூர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றார்கள். மேலும் இந்த படத்தை க்ளோபஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அழகர் ராஜ ஜெயபாலன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், நடிகர் விஜய் சமீபத்தில் பேசிய டயலாக் ஒன்றைப் பேசி மொக்கை வாங்கியுள்ளார்.

அதன்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு இருந்தவர்களை பார்த்து தம்பி கீழ இறங்குப்பா... தம்பி கீழ இறங்கப்பா என்று விஜய் கூறிய தோனியில் பேசுகின்றார். மேலும் தம்பி நீ கீழ இறங்கினாதான் நான் உனக்கு பல்ஸ் படத்தின் டிக்கெட்டை ஃப்ரீயாக தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கு இருந்தவர்கள் நீங்க முதல் கீழ இறங்குங்க என்று கூல் சுரேஷை நோக்கி கூச்சல் எழுப்பி உள்ளனர்.
மேலும் நான் கீழே வந்ததும் அடி வாங்குவது உறுதி என பேசிய கூல் சுரேஷ், நான் உண்மையாகவே விஜயின் ரசிகன் தான் என்று கழுத்தில் அணிந்துள்ள மாலையை காண்பித்து இது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் போட்டது.
அதன் போது தான் எனக்கு கூலு என்ற பெயரும் வந்தது. பலர் விஜயை வைத்து பயன் அடைகின்றார்கள்.. நானும் விஜய்யை வைத்து பயன் அடைகின்றேன்.. அதனால் இந்த படமும் பயனடையும் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!