• Apr 16 2026

ரஜினியைத் தொடர்ந்து ஆலியா பட்! 'துரந்தர் 2' படத்திற்கு குவியும் பாராட்டுகள்..

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

துரந்தர் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தேஷ்ராண்டே தயாரித்துள்ளார். விறுவிறுப்பான கதை மற்றும் எமோஷனல் அம்சங்களால் படம் பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த நிலையில், பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் ‘துரந்தர் 2’ படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அவர் கூறுகையில், “இந்த படம் ஒரு எமோஷனல் மேஜிக். இயக்குநர் ஆதித்யா தாரும், நடிகர் ரன்வீர் சிங்கும் இணைந்து உருவாக்கிய இந்த அனுபவம் தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.” என உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியுள்ளார்.

ஆலியா பட்டின் இந்த பாராட்டு, படக்குழுவினருக்கு மிகப்பெரிய உற்சாகமாக அமைந்துள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்த படம், தற்போது பிரபலங்களின் பாராட்டுகளாலும் மேலும் பேசப்படும் நிலையில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ‘துரந்தர் 2’ படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement