• Apr 18 2026

ரம்யா, வியானாவுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்.?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஒவ்வொரு எலிமினேஷன்  நடைபெறுவது வழமை. 

இந்த வாரம் இறுதியாக ரம்யா ஜோ வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் வியானா வெளியேறியுள்ளார்.  இவர்களுடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது .  எவ்வளவு திட்டினாலும் திருந்தாத கம்முவும் பார்வதியும் இருக்கும்போது இவர்களை வெளியேற்றியது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்த நிலையில், பிக் பாஸ்  வீட்டில்  இருந்து வெளியேறிய ரம்யா ஜோ மற்றும் வியானாவின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது.  அதன்படி  ரம்யா ஜோ, வியானா, சுபிக்ஷா, கமருதீன்,  எஃப்ஜே, பிரஜின், சாண்ட்ரா ஆகியோருக்கு  வாரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. 


கடந்த வாரம் ரம்யா ஜோ சரியாக விளையாடாத காரணத்தினாலும் அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும்  சோர்ந்து காணப்பட்டார்.  அதற்குப் பிறகு சனிக்கிழமை அன்று ரம்யா வெளியேறினார். 

அவருக்கு ஒரு வாரத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் பத்து வாரம் கடந்த நிலையில்,  அதாவது 70 நாட்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் பிக் பாஸில் சரியான ஈடுபாட்டில் இல்லாமல் தனிமையிலே இருந்து வந்தார் வியானா. இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.  அதன்படி அவருக்கு  ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் என்று கூறப்படும் நிலையில் 70 நாட்களுக்கும் 10 லட்சம் சம்பளம் என  கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் லட்சக்கணக்கில்  சம்பளம் பெற்று வீடு திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement