• Apr 17 2026

பிக் பாஸ் அரோராவின் அதிரடி முடிவு.? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் டாப் 4 போட்டியாளர்களில் ஒருவரான அரோரா டிக்கெட் டூ பினாலே வரை முன்னேறி வெற்றி பெற்றார். இவர் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக காணப்பட்டாலும் இறுதியில் பலரது மனதையும் கவர்ந்தவராக மாறினார்.

அரோரா சமூக வலைதளங்களில் பலரிடம் பிரபலமானவர். மாடலிங், ஆல்பம் பாடல்கள், சினிமா என பல துறைகளில் பணியாற்றி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அவருடைய செயல்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியமும், ரசிப்பையும் கொடுத்தது. ஆரம்பத்தில் சிலருக்கு வெறுப்பாக இருந்தாலும், பின்னர் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில், சமீபத்தில் அரோரா அளித்த பேட்டியில் எதிர்பாராத தகவலை வெளியிட்டுள்ளார்.


அவர் கூறியதன் படி, பிக்பாஸ் வீட்டில் உள்ள போதே வரும் சம்பளத்தை வைத்து போலந்து நாட்டிற்கு படிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளார். அங்கு உள்ள போர்ஷா பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிக்க அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும், சம்பளம் கிடைந்ததும் புறப்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அரோரா சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்த உள்ள செய்தியை அறிந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மாடலிங், பாடல்கள், சினிமா அனைத்தையும் விட்டு, முழுமையாக கல்விக்காக போகும் அவரது இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




Advertisement

Advertisement