• May 16 2026

த்ரிஷாவை காண ஈரோட்டை முற்றுகையிட்ட பேன்ஸ்! அதிர்ந்த கேரவன்! வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் நடிகை தான் த்ரிஷா. இவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, பல ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டிருந்தார். இதை அடுத்து லியோ படத்திலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடி சேர்ந்திருந்தார்.

லியோ படமும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி வசூலிலும் வேட்டையாடி இருந்தது. இந்த படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நல்ல வகையில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.


தற்போது தமிழ் சினிமாவில் கில்லி திரைப்படம் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதன் முதல் நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட ஏழு கோடியை கடந்துள்ளது.


இந்த நிலையில், தற்போது கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ஈரோட்டில் த்ரிஷா புதிய பட ஷூட்டிங்கில் இருப்பதை  அறிந்த ரசிகர்கள் அவரது கேரவணை முற்றுகை இட்டு  ஆர்ப்பரித்துள்ளனர்.

அதாவது, தெலுங்கில் சிரஞ்சீவியின் படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஐடென்டிடி படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.

மலையாள படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈரோட்டில் நடைபெற்று வருகின்றது. அங்கே த்ரிஷா நடித்து வருகிறார் என்று தெரிந்த ரசிகர்கள், த்ரிஷாவை நேரில் காண்பதற்காக பெரும் கூட்டமாக அலைதிரண்டு சென்றுள்ளனர். இதன் போது த்ரிஷாவும் வெளியே வந்து அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement