• Jun 14 2026

தோல்விக்கு பின் நடந்த சந்திப்பு.. ஸ்டாலின் கையைப் பிடித்து ரஜினி கொடுத்த வாக்குறுதி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது. இதனால், இதுவரை ஆட்சியில் இருந்த திமுக கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

இதனையடுத்து, கட்சியின் தலைவர் M. K.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, புதிய ஆட்சிக்கு வழிவிட்டுள்ளார். இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு அரசியல் மற்றும் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த சந்திப்பின் போது, “இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்” என ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது அவர்களுக்கிடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதோடு, அரசியல் மாற்றங்களின் மத்தியில் மனிதநேயமான ஆதரவை காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement