• May 18 2025

OTT இல் ரிலீஸான ஆவேசம் திரைப்படம்.. குதூகலத்தில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜித்து மாதவன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் கடந்த ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெளியான திரைப்படம் தான் ஆவேசம்.

இந்த படத்தில் மூன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் காலேஜில் ஏற்படும் பிரச்சனை காரணமாக கேங்ஸ்டர் உதவியை தேடி ஃபாஹத் பாசிலிடம் சென்று மாட்டிக் கொள்கின்றார்கள். அவர்கள் மீது ஆரம்பத்தில் அதீத பாசம் காட்டும் பகத் பாசில், பின்பு அவரே பிரச்சினையாக அமைந்து விடுகிறார். கடைசியில் பகத் பாசிலுக்கும் அந்த மாணவர்களுக்கும் என்ன ஆனது என்பதை படத்தின் மீதி கதையாக இருந்தது.

இந்த படத்தில் பகத் பாசில் ரங்கா என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக கலக்கியிருப்பார். அவர் நடந்து கொள்ளும் விதம் உண்மையில் கேங்ஸ்டர் ஆக இல்லை காமெடிய என்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக காணப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பகத் பாகத்தில் நடித்த ஆவேசம் திரைப்படம் இன்றைய தினம் அமேசன் பிரேம் வீடியோவில் வெளியாகிய உள்ளது.

இதேவேளை, 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 150 கோடி வரை வசூல் சாதனை படைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement