• May 16 2026

காத்திருந்தது போதும் களமிறங்குகிறார் ஆர்யா! ‘Mr. X’ ட்ரெய்லரில் மறைந்திருக்கும் மர்மங்கள்

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஆர்யா நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியீட்டை காத்திருந்த ‘Mr. X’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், சரத்குமார், அதுல்யா ரவி, ரைசா வில்சன், ஜெய பிரகாஷ் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் பணியாற்றியுள்ளார். நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த இந்த படம், வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இந்நிலையில், ‘Mr. X’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரெய்லரில் ஆக்ஷன், த்ரில்லர் அம்சங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால், படம் மீது எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement