• May 17 2025

ரோகிணியின் முடிவால் பதறும் வித்தியா..! முத்துவின் ஆட்டத்தை முடிக்க சதி பண்ணும் அருண்..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சிற்றி ரோகிணி கிட்ட ஒரு செயினைக் கொடுத்திட்டு இத வைச்சுக் கொண்டு பணம் கொடுங்க என்று சொல்லுறார். அதுக்கு ரோகிணி இத வாங்குறன் ஆனா என்கிட்ட இப்ப பணம் எதுவும் இல்ல கொஞ்ச நாள் கழிச்சுத் தான் தருவேன் என்கிறார். பின் ரோகிணி அந்த செயின் ஒரிஜினல் தான என்று பாக்கிறார். அதைப் பார்த்த சிற்றி நான் இந்த மாதிரி எல்லாம் ஏமாத்த மாட்டேன் என்கிறார்.

இதனை அடுத்து ரோகிணி நான் உன்ன நம்புறன் இந்த செயின் நல்லா இருக்கென்று தான் பாத்தனான் என்கிறார். பின் ரோகிணி வித்தியாவுக்கு போன் எடுத்து எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா என்று கேக்கிறார். அதைக் கேட்ட வித்தியா என்ன பண்ண வேணும் என்று சொல்லு நான் செய்யுறேன் என்கிறார். அதைத் தொடர்ந்து சிற்றி கிட்ட இருந்து ஒரு செயின் வாங்குறன் அதுக்கு கொஞ்சம் பணம் உதவி செய்யுறியா என்று கேக்கிறார்.


இதைக் கேட்ட வித்தியா அந்த சிற்றி கிட்ட இருந்து வாங்கப் போறியா ஏதாவது வில்லங்கமா இருக்கப் போகுது என்று சொல்லுறார். அதுக்கு ரோகிணி அப்படி எல்லாம் இல்ல நான் வடிவா பாத்திட்டேன் எந்தப் பிரச்சனையும் இல்ல என்கிறார். மேலும் நீ கல்யாணம் பண்ணப் போற அந்த முருகனிட கேட்டு வாங்கித் தாறியா என்று கேக்கிறார். அதுக்கு வித்தியா சரி நான் கேட்டுப் பாக்கிறேன் என்று சொல்லுறார்.

அதனை அடுத்து மீனா அருணை பார்ப்பதற்காக பொலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நிற்கிறார். அப்ப அங்க அருண் இல்லாததால வேற ஒரு பொலிஸிட உதவி கேக்கிறார். ஆனா அவங்க யாருமே மீனாவுக்கு உதவி செய்யாமல் வெளியில அனுப்பிட்டாங்க. இதனை அடுத்து முத்துவ பொலிஸ் அரெஸ்ட் பண்ணனும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement