பழம்பெரும் நடிகர் சிவாஜி வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.பிரபு ,விக்ரம் பிரபு வரிசையில் ராம்குமாரின் மகனும் சிவாஜியின் பேரனுமாகிய தர்ஷன் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தினை மிகவும் அமைதியான முறையில் தயாரித்து முடித்துள்ளதுடன் பாலா எனும் புதுமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கங்கை அமரன் ,ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதைவிட சிவாஜி வீட்டில் இவர் ரொம்ப handsome ஆன ஆள் என்பதும் இவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கு பல தயாரிப்பாளர்கள் முயற்சி செய்துள்ளதுடன் தற்போது அதனை சத்யஜோதி நிறைவேற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!