சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா ஸ்ருதியைப் பாத்து முத்து எந்தத் தப்புமே பண்ணல என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி தப்பே பண்ணாமலா பொலீஸ் இவரப் புடிச்சுக் கொண்டு போய் வைச்சிருந்தாங்க என்று கேக்கிறார். அதுக்கு மீனா ரோகிணி வேணாம் உண்மை என்னனு தெரியாமல் பேசிக்கொண்டு இருக்காதீங்க என்று சொல்லுறார். பின் மனோஜ் அதுதான் நாங்க எல்லாத்தயும் கண்ணு முன்னாடி பாத்தோமே இதுக்கு மேலையும் தப்பு பண்ணல என்று சொல்லப் போறாங்களா என்று கேக்கிறார்.
அதனை அடுத்து மீனா கண்ணால பாக்கிற எதுவுமே உண்மை ஆகிடாது என்று சொல்லுறார். பின் மீனா அந்த Traffic பொலீஸால தான் எல்லாப் பிரச்சனையும் வந்தது என்கிறார். மேலும் முத்து காரில போகும் போது கார் பிரேக் பிடிக்காமல் போய்ட்டு அதனால தான் எல்லாப் பிரச்சனையும் வந்தது என்கிறார் மீனா. இதனைத் தொடர்ந்து நடந்த எதையுமே விசாரிக்காமல் அந்தப் பொலீஸ் இவரு மேல தேவையில்லாத பழியை போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு போய்ட்டார் என்று அழுது கொண்டு மீனா சொல்லுறார்.
பின் மீனா ஸ்ருதியைப் பாத்து இவங்க உங்களையும் ரவியையும் பிரிச்சுக் கொண்டு போறதற்காக சின்னப் பிரச்சனையையும் பெருசாக்குறாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து மனோஜ் இவங்க சும்மா கதை விடுறாங்க முத்து குடிச்சிட்டுத் தான் வண்டியை ஓட்டியிருப்பான் அதுதான் இப்படி எல்லாம் நடந்திருக்கு என்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை மனோஜ் இப்படி எல்லாம் பேசாத என்று அடிக்கப் போறார்.
இதைத் தொடர்ந்து சிற்றி முத்துவுக்கு எதுவும் ஆகாத கோபத்தில தன்னட வேலை செய்யுற ஆட்களைப் போட்டு அடிக்கிறார். பின் மீனா தனக்குத் தெரிஞ்ச பொலீஸிட்ட போய் ஹெல்ப் பண்ணச் சொல்லிச் சொல்லுறார். அதுக்கு அந்தப் பொலீஸ் நீ வேணும் என்று தான் இந்த வேலையை செய்தனீ என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!