• Apr 18 2026

ஆலியா மானசா, சஞ்சீவ் வாழ்க்கையில் விவாகரத்தா? இப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யாரும் நினைக்கல..!!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். 

ஆல்யா மானசா முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பு சீரியலில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது இதனை அடுத்து ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். 


அதில் ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRP உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, கணவருடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 


இந்த நிலையில், சமீப நாட்களாக இருவரும் சேர்ந்து போட்டோ வீடியோக்கள் வெளியிடாமல் காரணத்தினால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்  வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆலியா மானசா. அதில் அவர் கூறுகையில்,

இது போன்ற விவாகரத்து வந்திகளை பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. பெரிதாக ரியாக்ட் பண்ணுவதில்லை. முதலில் நம்பியவர்கள் ஏமாற்றும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இப்போது அந்த சிந்தனை கூட எனக்கு வருவதில்லை என்று ஆலியா மானசா தெரிவித்துள்ளார்.இவ்வாறு  விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆலியா மானசா. 

Advertisement

Advertisement