‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் குமாரின் மகனாக கார்த்திகேய தேவ் நடித்திருந்தார். அத்தகைய நடிகர் தனது திறமையான நடிப்பினால் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். அப்படத்தில் “விஹான்” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்திகேய தேவ்வின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, கார்த்திகேய தேவ் தனது அடுத்த படமாக ‘கூலி’ திரைப்படத்தில் இணைந்துள்ளதுடன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் கதைக்களம், ஒரு கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் என கூறப்படுகின்றது. தினசரி வேலையில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களின் உணர்ச்சி, போராட்டங்கள் மற்றும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கவிருக்கும் இப் படம், கார்த்திகேயவிற்கு சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகின்றது. ‘குட் பேட் அக்லி’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கார்த்திகேய தேவ், தற்போது ‘கூலி’ படத்தில் நடிப்பதென்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!